புத்தகங்களின் பளு தாங்காது புவியீர்ப்பு விசைக்கு அதிகமாகவே வளைந்து கொடுத்திருக்கின்றன அலமாரியின் அடுக்குகள். அந்தக் கனம் தமிழருவி மணியனின் வார்த்தைகளிலும்


001 ‘‘நான் அப்போது ஆறாம் வகுப்பு மாணவன். அப்போது கல்கி இதழில் வெளிவந்த நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ தொடர்கதையை என் தந்தை ஆழ்ந்து வாசிப்பார். என் தாயாரை அருகில் அமரவைத்து, கதையின் ஒவ்வொரு வாக்கியத்தையும் வாசித்துச் சிலாகித்துச் சிலிர்ப்பார்.அப்படி என்னதான் அவர்களை ஈர்த்து இழுக்கிறது என்று நானும் அந்தத் தொடர் கதையை வாசிக்கத் தொடங்கினேன். மயிலிரகாகவும் வாள் முனையாகவும் வார்த்தைகளை நா.பா. பிரயோகித்
திருந்த விதம் பேராச்சர்யம்! பனித் துளியைவிடப் பரிசுத்தமாக கதையின் நாயகன் அரவிந்தன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருப்பான்.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பார்கள். ஆனால், சின்ன விதிவிலக்காக தீதும் நன்றும் தரவல்லது ஒரு  புத்தகம். இன்று நான் செழும் செல்வத்தைவும் அதிகார அரியணைகளையும் கைக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு நல்ல மனிதனாக எனது ஆயுளை இந்நாள் வரை கழித்திருப்பதற்கு அந்த அரவிந்தனுக்குக் கடமைப்பட்டு இருக்கிறேன்!’’


002 ‘‘பத்தாவது படிக்கும்போது கணக்குப் பாடம் என்னை உருட்டிப்புரட்டி உலுக்கியது. ராமையா வாத்தியாரிடம் என்னைப்பிரத்யேகமாக கணக்குப் பாடம் பயில அனுப்பினார்கள். அப்போது ஒரு நாள், என் தாயார் என்னைக் கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்கி வருமாறு சொன்னார். நான் மறுத்து போக்கு  காட்டித் தட்டிக் கழித்துக்கொண்டு இருந்தேன். என்னை அழைத்த ராமையா வாத்தியார், ‘மணியா! நன்றி உணர்ச்சியின் முதல் துளி எப்போதுமே நம்பெற்றவர்களுக்கு உரித்தானது. நன்றி படர்ந்திருக்கின்ற இதயம் தான் இறைவனின் இருப்பிடம். சொத்து, சுகம்,ஆ￞தி, அந்த￞து என வசதி வாய்ப்புகளுடன் ஒருவன் வாழ்ந்திருந்
தாலும்பெற்றவர்களைப் பேணிக்காத்திருந்தால்
தான் அவனது மறைவுக்குப்பிறகும் வாழந்திருப்பான். அப்படிப்பட்டவர்கள் ஆண்டாண்டு காலம் நிலைத்து நின்று உச்சகட்ட மதிப்புபெறும் தேக்கு மரத்துக்கு ஒப்பாவார்கள். பெற்றவர்களை உதாசீனப்படுத்
துபவர்கள், எளிதில் வெட்டி வீழ்த்தி விடக்கூடிய முருங்கை மரத்துக்கு ஒப்பானவர்கள். நீ தேக்கா, முருங்கையா?’ என்று கேட்டார்.

இன்றுவரை தேக்கு மரமாக நிலை கொள்ளும் வகையில்தான் எனது நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டு இருக்கிறேன். இன்றும் நாள் தவறாமல் காலையில் கண்விழிக்கும் முன், எனது இரு உள்ளங்கைகளையும் கண்களுக்கு முன் விரித்துக்கொண்டு, என் தாய், தந்தையரின் உருவங்களை மானசீகமாக அதில் நிலைநிறுத்தி, அதில் கண் விழித்த பிறகுதான் எனது அன்றைய பொழுது  புலரும்!’’


003 ‘‘கல்லூரிக் காலங்களில் நான் சிவாஜி கணேசனின் அதி தீவிர வெறியன். எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்த நீலகண்டன் என்ற நண்பனும் நானும் பெரம்பூரிலிருந்து ஒன்றாக கல்லூரிக்குக் கிளம்பி வருவோம். திடீரென்று ஒரு நாள் எங்களிடையே சிவாஜி, எம்.ஜி.ஆர் பற்றிய விவாதம் பற்றிக்கொண்டது. பெரம்பூர் சந்தைப் பகுதி என்பதையும் மறந்து நடுவீதியில் கைகலப்பிட்டுக்
கொண்டோம்.


ஒரு பெரியவர் எங்களை விலக்கி விசாரித்தார். ‘‘தன்னிலிருந்து விலகி தன்னைப் பார் என்பார்கள். அப்படி விலகி உங்களையே நீங்கள் பார்க்க வேண்டிய நேரமிது. ‘தங்களுக்காக இரு இளைஞர்கள் பெரம்பூர் சந்தையில் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்’என்ற தகவல் எவ்வகையிலாவது சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடையுமா? அப்படியே தகவல் சென்று சேர்ந்தாலும், அவர்கள் உடனே படப்பிடிப்புகளை ரத்து  செய்துவிட்டு, உங்களுக்கு வலுசேர்க்க ஓடி வருவார்களா? ‘மூடர்கள்’ என்று ஒற்றை வார்த்தையில் உங்களை ஒதுக்கிவிட்டு, தத்தமது வேலைகளையன்றோ பார்க்கச் சொல்வார்கள்! அவர்களுக்காக நீங்கள் ஏன் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு வடுவை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள்?’’ என்று சில சாட்டைகளைச் சொடுக்கினார் அவர்.
பின்னர், காங்கிர￞ கட்சிக்காக மேடைகளில் முழுங்கும் சமயம், சிவாஜி கணேசனுக்குப் பக்கத்து இருக்கையில் அமரும் சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும், ஒரு ரசிகனுக்கான சிலாகிப்போ, பரவசப்பேரானந்
தமோ துளியும் என்னிலிருந்து வெளிப்படாத பக்குவத்தை ஏற்படுத்திய நாள் அது. எள் மூக்கின் முனையளவும் எனக்குப்பயனளிக்காத ரசனையி
லிருந்து என்னை மடைமாற்றிய அந்தப் பெரியவரை அதற்கு முன்னும் நான் கண்டதில்லை; அதற்குப் பின்னும் கண்டதில்லை!

004. ‘‘ ‘காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்; ஆதலினால் காதல் செய்வீர்; உலகத்தீரே...!, என்ற பாரதியின் உத்தரவு என்னைச் செலுத்தியதோ என்னவோ, நானும் காதல் வயப்பட்டேன். அவளுக்குப் பளிங்கைவிடவும் பரிசுத்தமான உள்ளம். எப்போதாவது அவளைச் சந்திப்பதும், எப்போதுமே அவளைப் பற்றிச் சிந்திப்பதும், என் வாழ்க்கைப் பாதையாக இருந்த காலத்தில், ஒரு நாள்... ‘எனக்காகப் பாடேன்!’ என்ற எனது யாசகத்தை ஏற்று, தயக்கத்துடன் பாடத்தொடங்குகிறாள்.
‘உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல...
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல’ கூந்தல், குரல், மணம், அன்பு என்று இவள் சம்பந்தப்பட்ட அனைத்தும் எப்படி இனிமையாக இருக்கிறது என்று நான் யோசிக்கும்போதே
‘இங்கு நீயொரு பாதி, நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி’ என்று உருக்கமாகப் பாடி நிறுத்துபவள், ‘இதுவரை காதலர்களாக இருந்தோம். இனி, நண்பர்களாக இருப்போம். நமது திருமணம் கைகூடாது என்று நினைக்கிறேன்!’ என்கிறாள், கண்களில் நீர் தேக்கி.
‘ஒன்றைப் புரிந்து கொள் காய் கனியாகலாம்; ஆனால், கனி காயாக முடியாது. நண்பர்கள் காதலர்கள் ஆகலாம். ஆனால், காதலர்கள் நண்பர்கள் ஆக முடியாது!’ என்று மட்டும் அவளிடம் சொன்னேன். உடற்கூட்டிலிருந்து உயிர் பிரிவதும் காதலில் தோல்வியுறுவதும் ஒரு முறைதானே நிகழும்! அப்படி ஒரு முறை நிகழ்ந்தால்தான் அது உயிர்... அது காதல்!’’


005 ‘‘அரசியல்வாதிகளுள் மறைந்த காளிமுத்து அருமையான மனிதர். அவர் அதிமுக முகாமிலிருந்
தாலும் இலக்கிய ரசனை எங்களிடையே பர￞பர பிரியத்தை வளர்த்திருந்தது. நான் அப்போது காங்கிரஸிலிருந்து விலகி, ஜனதா கட்சியில் சேர்ந்து அதிலிருந்தும் விலகி லோக் சக்தி என்ற கட்சிக்குத் தலைமை தாங்கியிந்தேன். அப்போது நானும் காளிமுத்துவும் ஒரு புகை வண்டிப்பயணத்தில் சந்தித்துகொள்ள நேர்ந்தது. பல பரப்புகளில் சுற்றித்திரிந்த பேச்சு, எனது அப்போதைய அரசியல் நிலைப்பாட்டில் நிலைகொண்டது.
‘நாம இருக்குற இடம் நமக்கு அடையாளமா இருக்கனும். நாமதான் அந்த இடத்துக்கு அடையாளம்னா, அது நமக்கு எந்த விதத்திலும் வளர்ச்சி இல்லை. இப்ப எவ்வளவுத்ான் நீங்க கத்தினாலும் உங்களைச் சுத்தியிருக்கிற பத்து பேருதான் கேப்பாங்க அதுவே ஒரு மதிப்பான இடத்துல இருந்தீங்கன்னா, நீங்க தும்மினாக்கூட 1000 பேர் விமர்சிக்க வரிஞ்சு கட்டிட்டு வருவாங்க. அந்த வித்தியாசத்தைப் புரிஞ்சுக்காங்க’ என்றார். ஆழ்ந்து யோசித்த போது அதன் நிதர்சன் உண்மை புரிந்து. அதற்குப் பிறகான  எனது நிலைப்பாடுகளை அந்த ஒரு இரவின் உரையாடல்கள்தான் தீர்மானித்தன!’’

006. ‘‘சமீப நாட்களாக ஈழத்துப்பிரச்னை குறித்து நான் வெளிப்படுத்தும்கருத்துக்கள் ஆளும் அரசாங்கத்துக்கு  அசௌகரியஅவ￞தை ஏற்படுததியது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதமாக்கிக்கொண்டு என்னை எதிர்த்துக் காட்டமாகக் கருத்துக்களை உதிர்த்தார் என் நண்பர் ஒருவர். எனக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்ததைப் பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.ஆனால், சிலரிடம் பெற வேண்டிய சலுகைகளுக்காக இதை ஒரு சாக்காக அவர் பயன்படுத்தியதுதான் எனது ஆதங்கம். அப்படிப்பட்டவருக்காக நான் பல சமயங்களில் நட்பின் உன்னதத்தைக் கட்டிக் காத்ததெல்லாம் அர்த்தமிழந்த நாள் அன்று!’’

007. நான் காங்கிர￞காரனாக இருந்தாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி அவராகவேதான் எனக்குத் திட்டக் குழு  உறுப்பினர் பதவி வழங்கினார்; பாரதியார் விருது வழங்கினார்; நான் ஒரு வார்த்தை கேட்டேன். என்பதற்காக வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஒன்றை ஒதுக்கிக் கொடுத்தார். ‘இவையெல்லாம் செய்தார்’ என்பதற்காக இல்லாமல், அவரது அயராத தமிழார்வம் மற்றும் இடையறாத உழைப்பின் மேல் எனக்குத் தீராத மரியாதை இருக்கிறது.
‘தமிழனத் தலைவர் என்ற பட்டம் இனியும் நிலைத்திருக்க வேண்டுமானால், முதல்வர் தன்னையே முடுக்கி விட்டுக்கொள்ளவேண்டிய நேரமிது’ என்று நான் எழுதிய கட்டுரை வெளியானதும், அவரே என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். ‘என்ன மணியன்... நான் இதுக்கு மேல என்ன பண்ணணும்னு எதிர்பார்க்குறீங்க?’ என்று கேட்டார். ‘ஐயா! குறைந்தபட்சம் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்திருக்கலாமே!’ என்றேன். ‘தி.மு.க உறுப்பினர்கள் பதவி விலகியும் நல்லது எதுவும் நடக்கவில்லை என்றால்...?’ ‘ஐயா! என்னைத் தப்பாக நினைக்காதீர்கள் அப்படி ஒரு நிலையில் நீங்கள் முதல்வர் பதிவியைத் துறப்பது நிச்சயம் ஒருமாற்றத்தை ஏற்படுத்தும்’ என்றேன். ‘நான் முதல்வர் பதவிலிருந்து விலகியும் நல்லது நடக்க வில்லையென்றால்?’ என்று விடாமல் கேள்வியை வீசினார். ‘ஐயா! நிச்சயம் உங்கள் பதவி விலகல், மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளியாக இருக்கும்’ என்றேன். ‘ஓஹோ!’ என்ற படி தொடர்பைத் துண்டித்தார். மறுநாள், நான் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்யச் சொல்லி அரசாங்கம் உத்தரவுச் சீட்டு அனுப்பியிருந்தது.அப்போதுதான்முந்தைய தினம் அவர் தொலைபேசித் தொடர்பை மட்டும் துண்டிக்கவில்லை என்று உணர்ந்துகொண்டேன். அரசு நிர்ணயித்துள்ள வாடகையை மாதம் தவறாமல் செலுத்தி வருகிறேன். ஆனால், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் எவரையும் இதுவரை கட்டுப்படுத்தியிராத விதியைச் சுட்டிக்காட்டி, என்னைக் காலி செய்யச் சொல்லியிருந்தார்கள்.நான் அந்தச் சங்கதிகளுக்குள் எல்லாம் புகவிரும்ப

வில்லை. ஒருவனுக்குச் செய்த உதவியை செய்தவர் மறந்துவிட வேண்டும; பெற்றவர் மறுந்து
விடக்கூடாது. முதல்வராக கருணாநிதி எனக்குச் செய்த உதவியை நான் மறக்கவில்லை.ஆனால், செய்த அவரும் மறக்கவில்லை என்பதான் இருதரப்
புக்கும் வருத்தத்தை உண்டாக்கி விட்டது.
எத்தனைதான் நெருக்கமாக, விருப்பமாக இருந்தாலும் நமது திறமை, தகுதி கருதிக்கூட எந்தச் சலுகையும் உதவியையும் பெறக்கூடாது என்ற பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது, வீட்டுக்கு ஓலை வந்த அந்த தினம்.
வாழ்க ஜனநாயகம்!’’


 

 

 

 

 

 

 

     
 
 
 
எது சரி?

நமது வாழ்க்கையை எது வழி நடத்துகிறது? இறைவன் விதித்த விதியா? மனிதன் விளைவித்த வினையா? ஒவ்வொருவருக்கும் ஆண்டவன் தனித்தனியே தலையில் எழுதிய விதிப்படிதான் வாழ்க்கை என்றால், மனித முயற்சிக்கு வழியே இல்லை. `மனித முயற்சிப்படியே எல்லாம் நடக்கும். இறைவன் விதித்த விதியென்று தனியாக வேறெதுவும் இல்லை, என்ற முடிவுக்கு வந்துவிட்டால், ஆண்டவனின் இருப்பே கேள்விக்குரியதாகி விடும். எது சரி?


 
Copyright © 2008 thamizharuvimanian.com