நாம் வாழும் சமூகத்தின் எந்தப்பக்கம் திரும்பினாலும் பொய் முகங்கள். போலிக்கூச்சல்கள் நாடு விடுதலை பெற்று அறுபதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் நாம் இன்னும் வறுமையிலிருந்து முற்றாக விடுபடவில்லை; எழுத்தறிவு எல்லோருக்
கும் வாய்த்துவிட வில்லை. சுற்றுப்புறச் சூழல் ஆரோக்கியமாக அமைந்துவிடவில்லை. வன்
முறையை வளர்த்துவிடும வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு முதல் முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் நம் அரசியல்வாதிகளே!
இன்றுள்ள அரசியல்வாதிகளில் மிகப் பலர், விழுகிற ஒவ்வொரு வியர்வைத்துளிக்கும் விளைச்
சலை எதிர்பார்க்கும் வியாபாரிகள். சுயநலவாதிகளின் சொர்க்க புரியாக அரசியல் உலகம் பாழ்பட்டு விட்டது.
மனித மரங்கள் மானத்தைக் காக்கக் கோவ
ணத்துக்குத் துணியில்லாமல் தலைகவிழ்ந்து நிற்
கும்போது, கொடி மரங்களில் மட்டும கட்சிக் கொடிகள் குதூகலமாய்ப் பறந்து கொண்டிருக்
கின்றன. ஒவ்வொரு கட்சியும் ஆட்சி நாற்காலியில் ஆசை வைப்பது பாமர மக்களின் பசியைத் தீர்ப்பதற்கு அன்று; அதன் தலைவர்களை பணமுதலைகளாக வளர்த்தெடுப்பதற்காகவே.
நம் ஆட்சியாளர்களிடம் இச்சகம் பேசுபவர்களுக்கு இருக்கும் மரியாதை அறிவாளிகளுக்கும், விஞ்ஞானி


களுக்கும் நிச்சயமாக இல்லை. சாகசங்களும், ஏமாற்றுத் தந்திரங்களும் உண்மை அறிவையும், உயர்ந்த உழைப்பையும் உதாசீனப்படுத் றன. கள்ளுண்ணாமை குறித்து வள்ளுவன் வலியுறுத்தியதும், மதுவிலக்குக்காக மகாத்மா கொடி பிடித்ததும் அர்த்தமற்றுப் போய்விட்டன. நம்மை நெறிப்படுத்த வேண்டிய தலைவர்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். ஒழுக்கக்கேடுகளுக்கு ஒப்பனை செய்கின்றனர்.
ஆட்சிக்கலைய ‘ஆயளவநச ளுஉநைஉேந’ என்றார் கிரேக்க அறிஞர் பிளேட்டோ. ‘உடல் நலமற்ற நேரத்தில் அழகான, பேச்சாற்றல் மிக்க மருத்துவரை நாம் தேடுவதில்லை. அறிவார்ந்த மருத்துவரையே நாடி ஓடிகிறோம். நாடு நோயுற்றபோதும் அறிவார்ந்த
வர்களையே ஆள்வதற்காக நாம் நாடுவோம்’ என்றார் அந்த ஆதிச் சிந்தனையாளர். அவருடைய சீடர் அரி￞டாட்டில், ‘ஜனநாயகம், பிரபுக்கள் ஆட்சியை விடவும் கீழானது. ஏனெனில், அது பொய்யான சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு வகையில் சமமாக இருப்போர் எல்லா வகையிலும் சமமாக இருக்கவியலாது. திறமை எண்ணிக்கைக்கு முதற்பலியாகிவிடும். மக்களை மிக எளிதில் ஜனநாயகத்தில் திசை திருப்ப முடியும். மக்களுக்கு எப்போதும் திடபுத்தி இருப்பதில்லை. அறிவாளி
களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்படவேண்
டும்’ என்று கூட வலியுறுத்தினார்!
அனைவருக்கும் வாக்குரிமை என்பதுதான் ஜனநாயத்தின் ஆணிவேர். வாக்களிப்பதற்குக்
குறைந்தபட்சக் கல்வி அவசியம் என்று நம் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத் அரசியல் நிர்ணய சபையின் தலைவராக  இருந்த போது அழுத்தமாக வலியுறுத்தினார். ஆனால் நேரு அக்கருத்தை நிராகரித்தார். அப்போது ராஜேந்
திரபிரசாத், ‘நாம் உருவாக்கும் ஜனநாயகத்துக்குத் தலைகளின் எண்ணிக்கைதான் முக்கியம். அவற்றுள் என்ன இருக்கிறது என்பது முக்கிய மில்லை’. என்று ஏளனமாகக் குறிப்பிட்டார்.
வெறுந் தலைகளின் எண்ணிக்கையே ஜனநாயக ஆட்சிமுறை ஆனதால் அற்பமனிதர்கள் எல்லாம் அரசியல் களத்தில் அணிவகுக்கத்தொடங்கினர். சுதந்திரத்துக்குப்பின்பு அதிகாரம் சார்ந்த அரசியல்சூழல் சிறிது மாசடைந்தது. சின்ன மீனைப்துகின்

 

போட்டுப் பெரியமீனைப் பிடிக்கும் மனோபாவம் பெருகியது. ஆனால் இப்போது, தன்னிடமிருக்கும் எதையும் தராமல், பொதுச் சொத்தை முற்றாகச் சூறையாடும் பகல் கொள்ளை பெருகிவிட்டது.
வெற்றிலை பாக்குக் கடை வைப்பதற்குக்கூட முதலில் கொஞ்சம் மூலதனம் தேவைப்படுகிறது. ஆனால், அரசியல்வாதியாகப் பரிணாமம் பெற எந்த மூலதனமும் அவசியமில்லை என்றாகிவிட்டது. ஆட்சி நாற்காலியில் அமரும் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக அதிகார வர்க்கத்தைக் கெடுக்கின்றனர். நேர்மைக்குறைவான அதிகாரிகள், ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதற்கான வழி
முறைகளை அறிவியல் ரீதியாகக் கற்றுக் கொடுக்கின்றனர். இந்த இரண்டு வர்க்கத்துக்கும் பல நேரங்களில் இணைப்புப் பாலமாக மோசமான கிரிமினல் பேர்வழிகள் வந்து சேர்வது வாடிக்கையாகி விட்டது. அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், கிரிமினல் குற்றவாளிகள் இணைந்து உருவாக்கும் முக்கூட்டணியில் இந்திய மக்களுக்கு மாறாத வறுமையும், ஜனநாயகத்துக்கு மூச்சுத் திணறலும் நிலையான நோய்களாய் நீடிக்கின்றன. இந்த நோய்கள் தீர்வதற்கு எதுதான் சிறந்த மருந்து? இந்த கேள்விக்கு எளிதில் விடை காண முடியாதபடி இடியாப்பச் சிக்கலாய் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்கள் சீர்கெட்டுவிட்டன.

இந்திய அரசியலின் சீரழிவுக்குத் தமிழகத்தின் பங்களிப்பு மிகவும் பிரதானமானது. காங்கிரசிலிருந்து சோஷலி￞டுகள் வெளியேறியதும், கம்யூனி￞டுகள் உருவானதும் சுதந்திரா கட்சி உதயமானதும் சித்தாந்த வேறுபாடுகளின் அடிப்படையில் என்பது வரலாறு. ஆனால், பெரியார் தம் முதியவயதில் ஓர் இளம் பெண்ணை மண முடித்ததைக் காரணமாக்கிப் புதிய கட்சி பிறந்த பெருமைக்குரியது தமிழகம். பிரிவினைவாதம், மண்ணின் மைந்தர்கள் என்ற இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்தேற்
றங்கள் முதலில் கருக்கொண்டது நம் தமிழ் மண்ணில்தான்.  மலினமான கோஷங்களைக் கொண்டே மக்களை எளிதாக  ஏமாற்ற முடியும் என்ற வரலாறு படைத்தது தமிழினத் தலைவர்கள்தான். இலவசங்களால் வாக்காளர்களை வளைத்துப்போட முடியும் என்று இந்திய அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியவர்கள் நம் திராவிட இயக்க ஆட்சியா
ளர்களே.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு. கழகம் பிறந்ததும் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. பிறந்ததும், ம.தி.மு.க. உருவானதும் தனிமனிதப் பகைமை
யினாலன்றி தத்துவவேறுபாடுகளினால் அன்று. இன்று கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருக்கும் தணியாத வெறுப்புதான் தமிழகத்தில் எந்தப் பிரச்சனையிலும் மக்கள் ஒன்றுபடாமல் இரண்டு எதிரணிகளாய் மோதிக் கொள்வதற்கான முக்கியக் காரணம். நேருவின் குடும்பம், வாரிசு அரசியலுக்கு முதன்முதலில் விதை போட்டது தி.மு.கழகமோ ஊருக்கு ஊர் வாரிசு அரசியலை விருட்சமாகவே வளர்த்து விட்டது. இன்று அனைத்து அரசியல் கட்சிகளிலும்இந்தப் பெருநோய் இந்தியா முழுவதும் பரவிவிட்டது. காங்கிரஸைக் காப்பாற்ற நாட்டின் நூறு கோடி மக்களில் சோனியா காந்தியின் குடும்பத்தை விட்டால் வேறு ஆளில்லை என்பது எவ்வளவு பெரிய அவமானம்?
ஐம்பது ரூபாய் நோட்டுக்கும், ஐந்நூறு மில்லி சாராயத்துக்கும், ஒரு பிரியாணி பொட்டலத்துக்கும் தங்கள் வாழ்க்கையை மிக மலிவாக விற்றுத் தீர்க்கும் மனிதர்களின் கைகளில் வாக்களிக்கும் உரிமை இருக்கும் வரையில் பொது வாழ்வில் புதிய மாற்றங்கள் ஒரு போதும் பூக்கப்போவதில்லை. திருமங்கலம் இடைத்தேர்தல் ‘பணம் மட்டுமே வெற்றியைத் தீர்மாணிக்கும் ஒரே  சக்தி’ என்ற மோசமான நிஜத்துக்கு நிரூபணமாகிவிட்டது.

 

நம் நாட்டின் இன்றைய ஜனநாயக அமைப்பில் நூறு விழுக்காடு நேர்மையாளர்களையே ஆட்சியில் அமர்த்துவதற்கு வழியில்லை. நேர்மை வழுவாத, சபலங்களுக்கும், சலனங்களுக்கும் சிறிதும் ஆட்படாத, அறஞ்சார்ந்த அரசியல்வாதிகளை நாமொன்றும் வானத்திலிருந்து வரவழைக்க முடியாது.
‘‘நன்மைக்கும், தீமைக்கும் இடையில் எதைத் தேர்வு செய்வது என்ற நிலையில் நாம் இல்லை. நமக்கு வாய்த்திருப்பதெல்லாம் இரண்டு தீமைகளில் எந்த ஒன்றைத் தேர்வு செய்வது என்பதுதான். நாம் பெரிய தீமையைப் புறக்கணித்து விட்டு சிறிய தீமையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்’’ என்றார், காந்தியத்தில் கரைந்து போன ஆச்சார்ய கிருபளானி. அவர் பேசி கால் நூற்றாண்டுக்கு மேல் கடந்துவிட்டது!


தெரிந்தோ தெரியாமலோ நம் தேசத்துப் பெரும்பான்மை மக்கள் சிறிய தீமையை விட்டுவிட்டுப் பெரிய தீமையையே தேர்ந்தெடுத்து ஆட்சி நாற்காலியில் அமரச் செய்கிறார்கள்.

பாவம் பாரத தேசம்!


 

 

 

 

 

 

 

     
 
 
 
நாம் அனைவரும் பிச்சைக்காரர்களே.!

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம் நாம். நூறு கிடைத்தால் ஆயிரம் வேண்டும் என்கிறோம். ஆயிரம் வந்தால் லட்சத்தைத் தேடி ஓடுகிறோம். லட்சம் கிடைத்ததும் கோடிக்கு ஏங்கு
கிறோம். கோடியே கிடைத்தாலும் பணத்தை நாடி ஓடும் ஓட்டம் மட்டும் நிற்பதே இல்லை. கோடி கோடியாகக் குவித்தாலும் ஆசை உள்ள வரையிலும் ஒவ்வொருவரும் ஏழைதான். மனித மனத்தின் பசி தீராத வரை, நாம் அனைவ
- ரும் பிச்சைக்காரர்களே!


 
Copyright © 2008 thamizharuvimanian.com