அரசியல் உலகத்தில் நான் அடியெடுத்து வைத்து, மிகச்சரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. வாழ்க்கையின் சகலவிதமான இன்பங்களையும் அனுபவிக்க துடிக்கும் அதிகார வெறிபிடித்த சராசரி அரசியல்வாதிகளுக்கு நடுவில் சமுதாய நலனுக்காகவே அனைத்தையும் அர்ப்பணித்துவிட்ட ஒரு மகத்தான மகரிஷியாக காமராஜ் இருக்கிறார், என்பதை உணர்ந்தேன். அன்று முதல் நான் அந்த தேவனின் புகழ் பரப்பும் தெருப்பாடகனானேன்.

1971ம் ஆண்டு பொது தேர்தல். காங்கிர￞ மேடையில் என் கன்னிப்பேச்சு அரங்கேறிய காலம். சின்னஞ்சிறு வயதில், மீசை முளைக்காத ஓர் இளைஞன் நயத்தகு நாகரிகத்துடன் அரசியலை மேடைகளில் அலசுகிறான் என்று பெரியவர்கள் பேச தொடங்கினர். காங்கிர￞ மேடைகளில் எனக்கு ஒரு மரியாதைக்குரிய நாற்காலி போடப்பட்டது.

வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளராக நின்ற எ￞.ஜி. விநாயக மூர்த்தியை ஆதரித்து ஒரே நாளில் ஆறு கூட்டங்களில் காமராஜர் தேர்தல் நெருக்கத்தில் பேசினார். அவருக்கு முன்பாக நான் பேசிக்கொண்டே போகவேண்டும் என்று விநாயகமூர்த்தி விரும்பினார். அதுவரை அந்த பெருந்தலைவருக்கு முன்னால் பேசும் பேற்றினை நான் பெறவில்லை. வியாசர்பாடியில் அந்த வரம் வாய்ந்தது.நான் பேசிக்கொண்டிருக்கிறேன். திடீரென்று கூட்டத்தில் பரபரப்பு. பெருந்தலைவர் வந்து விட்டார். ஒரு தொண்டர், என்னை புறந்தள்ளி ஒலிபெருக் கியை பிடித்தார். ‘கர்மவீரர் வாழ்க! பெருந்தலைவர் வாழ்க!’ தெய்வத்தை நேரில் பார்த்த பரவசத்தில் தொண்டர் வாய் வலிக்க வாழ்த்துரைத்தார்.
‘பேச்சை ஏன் நிறுத்திவிட்டேன்னேன்? இன்னும் கொஞ்சம் நேரம் பேசு அந்த ஆளை முதல்ல வாழ்த்து சொல்றத நிறுத்த சொல்லுன்னேன்’. என்று காமராஜர் சொன்ன பின்பும் அந்தத் தொண்டர் ஒலிபெருக்கியை என்னிடம் தரத் தயாராக இல்லை. ‘ஏய்... என்ன வேலை இது’! என்று வாழ்த்தொலித்தவர் முதுகில் பெருந்தலைவர் ஓங்கி அடித்தார். கையில் பிடித்திருந்த ஒலி பெருக்கியோடு அந்த மனிதர் சரிந்து குப்புற விழுந்தார்.

கோபம் பொங்கிய விழிகளில் கருணை வழிந்தது. விழுந்து எழுந்தவரை அன்புடன் அருகில் அழைத்தார். ‘காந்திஜி வாழ்க! காங்கிர￞ வாழ்க!னு சொல்ல வேண்டியதானே,  காமராஜ்வாழ்க என்ன வேண்டிக்கிடக்கு? இந்தா... இப்படி மேடையில் என் பக்கத்துல வந்து உட்காருன்னேன்’ என்றார் காமராஜர். அதிசயமான தலைவர் அற்புதமான தொண்டர். தமிழக அரசியலில் அது ஒரு பொற்காலம்.
‘இதுவரையில் தமிழ்ல அருவி மாதிரி பேசினதை கேட்டீங்கல்ல’ என்று காமராஜர் தன் பேச்சை தொடங்கினார். அன்று முதல், கல் ஒன்று சிலையானது போல் மணியன் ‘தமிழருவி’ ஆனான்.காந்தியடிகளை நேசித்து, காந்தியத்துக்காகவே காலமெல்லாம் வாழ்ந்து, காந்திஜி பிறந்த நாளிலேயே காமராஜர் கண்மூடி அத்வைதியான பின்பு, லட்சியக்கனவுகளோடு அரசியலுக்குள் அடியெ
டுத்து வைத்த என்னைப் போன்ற எண்ணற்ற இளைஞர்கள் மாலுமி இல்லாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் மரக்கலங்களானோம்.
கட்சி மாறுவது என்பது ஒரு பெண்ணை கற்பழிப்பதுக்கு சமம் என்று கருதியவன் நான். ‘மாறாமல் நிலையாக ஓரிடத்தில் நிற்பது கழுதைக்குரிய குணம், என்று சர்ச்சில் சொன்னது எனக்கு தெரியும். ஆனாலும், நான் கொள்கைக் கழுதையாகவே விரும்பினேன்.

நான் முதலில் காமராஜருக்காக காங்கிர￞காரன் ஆனேன். காமராஜரோடும் அவர் மறைந்த பின்னும், ￞தாபன காங்கிரஸிலேயே நீடித்தேன். நான் இருந்த ￞தாபன காங்கிர￞, கால மாற்றத்தில் கோலமாற்றம் கொண்டு, ஜனதா, ஜனதா தளம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆனால், அதுதான் காமராஜரின் உண்மை தொண்டர்களின் எச்சமாக தமிழ் மண்ணில் உலவியது. சுயநலம் சார்ந்த தவறான அகில இந்திய தலைவர்களின் மலிவான நடவடிக்கைகளால் அந்த இயக்கம் நடைப்பிணமானது.கடந்த முப்பதாண்டுகளுக்கு மேல் பனித்துளியை போல் நான் பரிசுத்தமாக என் பொதுவாழ்வை நடத்தி வந்திருக்றேன். இருந்த வீட்டை இழந்துவிட்டு வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். எதன் பொருட்டும், எவர் பொருட்டும், சின்ன சலுகை
களுக்காக கூட நான் யாரிடத்தும் கைக்கட்டி நின்றதில்லை. காமராஜரை வழிபடு கடவுளாக என் நெஞ்சுக்குள் நேர்ந்து காந்திய பாதையில் வாழ்ந்து வருகிறேன். அதனால்தான் அரசியல் மலையின் சிகரங்களை தொட முடியாமல் அடிவாரத்தில் நான் நின்றேன்.
இன்றைய அரசியல் உலகத்தின் பொது இலக் கணம் என்ன? எனக்கு கிடைத்த அனுபவங்களில் கனிந்த ஞானத்தின் அடிப்படையில் சொல்கிறேன். உள்ளுக்குள் வஞ்சம் வளர்ந்து உதடுகளில் புன்முறுவலைப் பூசிக்கொள்ள வேண்டும். பொய் முகங்களோடு போலியாய் பழக தெரிய வேண்டும். இல்லாத திறமைகளையும் பெருமைகளையும் இருப்பதாக சொல்லி, விதம் விதமாய் பூச்சொரிந்து பல்லிளிக்க வேண்டும். பணத்துக்கும், அதிகாரத்
துக்கும், பணிந்து நடக்க வேண்டும். எங்கே வளைய வேண்டுமோ அங்கே வளைந்து எவருக்கு முதுகு சொரிய வேண்டுமோ, அவருக்கு முதுகு சொரிந்து, கைகூப்பி வாய்பொத்தி நிற்க வேண்டும். குறைந்தபட்சம் கள்ள சாராயம் காய்ச்சியாவது கணிசமாகப்பணம் வைத்திருக்க வேண்டும்.கட்டை பஞ்சாயத்து கலையை கற்று தேர்ந்
திருந்தால் இன்னும் நல்லது. சாதி கட்டுமானம் பின்புலமாக இருப்பது மேலும் நல்லது. இந்திய அரசியலில் இன்று வெற்றிபெற அடிப்படை அரிச்சுவடி இதுதான். இதுதான் பொதுவிதி. அப்துல் கலாமும், மன்மோகன்சிங்கும் பெற்ற வெற்றிகள் விதிவிலக்குகள்.

எத்தனை வெற்றிகளை நாம் பெறுகிறோம் என்று இறைவனது பேரேட்டில் குறிக்கப்படுவதில்லை. எப்படி வாழ்கிறோம் என்பது மட்டுமே பதிவாகிறது. அந்த விதத்தில் எனக்கு நிறைவுதான்.அரசியலை முற்றாகப் புறக்கணித்து விட முடியவில்லை. எவ்வளவு பாழ்பட்டு போனாலும் அது தான் சமூகத்தின் விதியை எழுதுகிறது. அதை தீயவர்களின் மொத்த குத்தகைக்கு நாம் விட்டுவிடலாகாது. அரசியல் காட்டில் அடர்ந்து கிடக்கும் தீமை இருட்டை அகற்ற  ஒரு தீக்குச்சியாய் நான் எரிகிறேன். அதுபோதும் எனக்கு.

 

 

 

 

 

 

 

     
 
 
 
சிந்தனை.!

சிந்தனை மரத்தில்தான் கேள்விப் பூக்கள் சிரிக்கின்றன. கேள்வியே எந்த அறிவின் பயனுக்கும் அடிப்படை ஆதாரம். அதுவே மனிதகுல முன்னேற்றத்தின் மூல மந்திரம். மெய்ஞானத் -
தின் முகவரி கேள்விக்குள்ளே மறைந்திருக்கிறது. `ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் கூடிக் கலந்து பிரசவித்த குழந்தையே இன்றைய விஞ்ஞானம்.

அறிவு இரு வகைப்படும். ஒன்று நூலறிவு, மற்றொன்று வாலறிவு. நூலறிவில் விரிவது விஞ்ஞானம். வாலறிவில் மலர்வது மெய்ஞானம். இரண்டும் எதிரெதிர் பாதைகள். எந்தப் பாதையில் போவது என்றாலும், கேள்விகளே பயணிக்கும் வாகனம். கேள்விகள் இல்லாத உலகில் விஞ்ஞானமும் இல்லை; மெய்ஞானமும் இல்லை.


 
Copyright © 2008 thamizharuvimanian.com