நட்பு செய்வோம்!

நண்பர்கள் இல்லாதவர்கள் நரம்பற்ற வீணைக்கு ஒப்பானவர்கள். நண்பர்கள் பலவிதம். கருணை பொழியும் அன்னையாய் ஒருவர்; அடிமை போல் சேவகம் செய்யும் ஒருவர்.
மேலும்

 

புதிய ரட்சகர் புறப்பட்டு விட்டார்

' மரணம் என் வாழ்வின் வாசற்கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெள்ளப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழிமூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன். அதுதான் 'சுதந்திர இந்தியா' என்ற என் பொற்கனவு. இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்கலாகாது. நம் நாட்டின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள். அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்.'
மேலும்

 

மாநில சுயாட்சியும் முதலை முட்டையும்

`நாங்கள் பார்க்காத பதவி இல்லை. பதவி என்பது எங்களுடைய கடும் பயணத்தில் இளைப்பாறுவதற்குக் கிடைத்த ஒரு நிழல். இதுவே நிரந்தரம் என்று கருதி ஏமாறும் ஆட்களல்ல நாங்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்றித் தந்த சுடர் விளக்கைக் கையிலேந்தி, மழையால் அது நனைந்து விடாமல், சூறாவளியால் அது மாய்ந்து விடாமல், அந்த ஒளிக் கற்றையை எங்களுடைய இன்னொரு கை கொண்டு காத்து, அந்தச் சுடர் விளக்கைக் கரடுமுரடான  பாதையில் காட்டாறுகளைத் தாண்டிக் கொண்டு போய் அதைக் குன்றின் மேலிட்ட விளக்காக பேரறிஞர் அண்ணாவின் லட்சிய தீபமாக ஏற்றி வைக்கின்ற அந்தப் பணிதான் தி.மு.கழகத்தின் முக்கியப் பணியே தவிர, இடையிலே வருகிற இந்தப் பதவிகள் அல்ல!’
-கலைஞரின் வாக்குமூலம் - `முரசொலி’
மேலும்

 

என்னை செதுக்கிய 7 நாட்கள்

புத்தகங்களின் பளு தாங்காது புவியீர்ப்பு விசைக்கு அதிகமாகவே வளைந்து கொடுத்திருக்கின்றன அலமாரியின் அடுக்குகள். அந்தக் கனம் தமிழருவி மணியனின் வார்த்தைகளிலும்.. மேலும்

 

பாவம் பாரதம்!

நாம் வாழும் சமூகத்தின் எந்தப்பக்கம் திரும்பினாலும் பொய் முகங்கள். போலிக்கூச்சல்கள் நாடு விடுதலை பெற்று அறுபதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் நாம் இன்னும் வறுமையிலிருந்து முற்றாக விடுபடவில்லை; எழுத்தறிவு எல்லோருக்கும் வாய்த்துவிட வில்லை. சுற்றுப்புறச் சூழல் ஆரோக்கியமாக அமைந்துவிடவில்லை... மேலும்

 

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

உலகில் பிறந்த எல்லா உயிர்களும் இன்புற்று வாழவே விரும்புகின்றன. வாழ்க்கை, வலிகள் தரும் ஜீவ மரணப் போராட்டமாகத் தொடர்ந்தாலும், விலங்கிலிருந்து மனிதன் வரை, வாழ்க்கை நேசத்தை விட்டு விடுவதில்லை. ஆண்டவன் படைப்பில் அதிகமாக அழுவதும் அடுக்கடுக்கான துன்பங்ளில் மிக மோசமாக அலைக்கழிக்கப்படுவதும் மனித இனம் மட்டுமே! மனிதரைப் போல்...
மேலும்


கொள்கை கழுதையாகவே இருக்க விருப்பம்!

அரசியல் உலகத்தில் நான் அடியெடுத்து வைத்து, மிகச்சரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. வாழ்க்கையின் சகலவிதமான இன்பங்களையும் அனுபவிக்க துடிக்கும் அதிகார வெறிபிடித்த சராசரி அரசியல்வாதிகளுக்கு நடுவில் சமுதாய நலனுக்காகவே அனைத்தையும் அர்ப்பணித்துவிட்ட ஒரு மகத்தான மகரிஷியாக காமராஜ் இருக்கிறார், என்பதை உணர்ந்தேன். அன்று முதல் நான் அந்த தேவனின் புகழ் பரப்பும் தெருப்பாடகனானேன்...
மேலும்


 

 

 

 

 

 

 

     
 
 
 



 
Copyright © 2008 thamizharuvimanian.com