வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்' என தமிழருவி மணியனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழருவி மணியன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட், குத்தகையை புதுப்பிக்க வீட்டு வசதி வாரியத்தை அணுக உத்தரவிட்டது. இதையடுத்து, வீட்டு வசதி வாரியத்திடம் விண்ணப்பித்தார். மனுவை நிராகரித்த வாரியம், குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழருவி மணியன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்ட மற்றவர்களுக்கு, குத்தகையை புதுப்பிக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை என்பதை மனுதாரர் நிரூபித்துள்ளார். மனுதாரரை மட்டும் தனியாக பிரித்து பாரபட்சம் காட்ட முடியாது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலை அளித்தும், மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து வீட்டு வசதி வாரியம் பதிலளிக்கவில்லை. எனவே, மனுதாரர் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்தக் காரணத்தை வாரியம் கண்டுபிடித்துள்ளது. வீட்டு வசதி வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலக கட்டடத்தின் மேல், பெரிய அளவில் நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டு உள்ளது. அதில், "தமிழ் வாழ்க' என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப் போன்ற தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் சிந்தனையாளர்களை கவுரவப்படுத்த வேண்டும்.
தமிழ் சிந்தனையாளர்களை பாதுகாப்பதன் மூலமே தமிழ் வாழும். அப்போது தான், நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டில் உள்ள, "தமிழ் வாழ்க' என்கிற வாசகம் மேலும் மிளிரும். இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார். |